search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லடம் தற்கொலை"

    பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் சார்லஸ் (17). இவர் கணபதி பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு சரியாக செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சார்லஸ் படிக்கும் வகுப்பு ஆசிரியர் சார்லசின் தாய் ரோஸ்லினிடம் வந்து உங்கள் மகன் சரியாக பள்ளிக்கு வருவதில்லை. பிளஸ்- 2 படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்தும் படி கூறுங்கள் என அறிவுரை கூறி சென்றுள்ளார்.

    இதனை தொடர்ந்து ரோஸ்சின் தனது மகனை கண்டித்துள்ளார். தந்தை இறந்து விட்டார். நான் தான் வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைக்கிறேன். சரியாக படிக்க வேண்டும் என கூறி உள்ளார். பின்னர் வேலைக்கு சென்று விட்டார்.

    இதனால் மனம் உடைந்த சார்லஸ் தனது தாய் சேலையால் வீட்டின் உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற ரோஸ்லின் வீடு திரும்பிய போது தனது மகன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதார்.

    இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சார்லஸ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பல்லடம்:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி இந்திராகாந்தி (வயது 44). இவர்களது மகள்கள் பெரியநாயகி (23), தாமரைச்செல்வி (21) மற்றும் ரசியா (19). செல்வராஜ் இறந்து விட்டதால் குடும்பத்துடன் பல்லடம் மங்களம் ரோடு அம்மாபாளையத்தில் இந்திராகாந்தி தனது மகள்களுடன் வசித்து வருகிறார்.

    ரசியா பல்லடத்தில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மற்றவர்கள் தாயுடன் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தனர். நேற்று வழக்கம்போல் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். ரசியா மட்டும் வீட்டில் இருந்தார். பகல் முழுவதும் ரசியாவின் நடமாட்டம் இல்லை.

    வேலை முடிந்து மகள்களுடன் இந்திராகாந்தி வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு உள் பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த தாய் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது ரசியா தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் சகோதரிகள் கதறி அழுதனர்.

    இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் பிணமாக தொங்கிய ரசியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசியா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×